Posts

சிக்கல் கோலம்

 அந்த ஊரில் வீடுகள் மிக குறைவு தான். நடுத்தெரு மேலத்தெரு கீழத்தெரு என மூன்றே தெருக்கள்.தெருவுக்கு ஏழு முதல் எட்டு வீடு இருக்கும்.ஊர் எல்லை முச்சந்தியில் ஆலமரத்தடி பிள்ளையார் கோவில் ஒன்று ஊர் வடக்கு எல்லையில் சுடுகாட்டுக்கு ஒரு பரலாங்குக்கு முன் சுடலை சாமி கோவில் ஒன்று நடுதெருவின் முடிவில் முப்பிடாரி அம்மன் கோவில் என மொத்தம் மூன்று கோவில் சாமிகள் உண்டு அந்த ஊர் மக்கள் துன்பத்தில் கடிந்து கொள்ளவும் மகிழ்ச்சியில் போற்றி கூறவும்.  மேலத்தெரு முதல் வீட்டில் பாத்திரம் தவறினால் கூட கீழத்தெருவின் கடைசி வீடு வரை செய்தி பறந்துவிடும். அது ஒற்றுமையா இல்லை அண்டை வீட்டு சமாச்சாரங்களை அறிவதில் உள்ள சுவாரசியமா என்ற கேள்வி எழுந்தால் சரியான பதில் கூறுவது கொஞ்சம் கடினம் தான்.  நடுதெருவிலே உசந்து நிக்கிற சங்கர பண்ணையார் வீட்டில் இருந்து கீழத்தெரு சுடலை கோயில் முந்தய கூரை வீட்டில் இருக்கிற முனிசாமி வீடு வரைக்கும் அத்தனை பேருக்கும் ஒரே தொழில் தான் , விவசாயம்.வித்தியாசம் ஒன்றுதான் சங்கர பண்ணையார் சொந்தமா நிலம் வச்சிருந்தார்.முனுசாமி அவர் நிலத்திற்கு களை பறிக்க போவார். சொந்த வயிலோ கூலிக்கு அடுத்தவன் வயிலோ விவச

அறியாமை

 இந்த தெருவிலேயே அந்த வீடு தான் மூன்று மாடிகள் கொண்ட ஒரே வீடு. மூன்று மாடிகளின் சுவற்றிலும் சுற்றி சுற்றி போடப்பட்டிருந்த சீரியல் பல்புகள் மினிட் மினிட் என மின்னி கொண்டிருந்தது. வீட்டுக்குள்  பல ஆண்களும் பெண்களும் பரபரப்பாக அங்குமிங்கும் ஓடி ஆளுக்கொரு வேலையை பார்த்தபடி இருந்தனர்.அதில் யாரும் வெளி மனிதர்கள் கிடையாது. அவர்கள் அத்தனை பேரும் அந்த வீட்டு மனிதர்கள் தான். இருபதாம் நூற்றாண்டிலும் கூட்டு குடும்பமாய் வாழும் வீடு என்ற பெருமை இந்த வீட்டுக்கு இருந்து வருகிறது. அந்த பெருமைக்கு இந்த வீடு முற்றிலும் தகுதியானதே. சுந்தரம்,வேலு,தம்பிரான்,சுடலை,பெருமாள் என்று ஐந்து அண்ணன் தம்பிகள் தங்கள் குடும்பத்தோடு இங்கு வாழ்கின்றனர்.ஐவருக்கும் ஒரே தொழில் தான், மர தொழிற்சாலை. கிட்டதட்ட முப்பது வருஷங்களாய் அவர்கள் அதை ஒன்றாய் நடத்தி வருகிறார்கள்.சுந்தரம்,வேலு மற்றும் தம்பிரானுக்கு ஆளுக்கு இரண்டு பெண் குழந்தைகள், சுடலை மற்றும் பெருமாளுக்கு ஆளுக்கொரு பெண்ணும் ஆணும் என்று மொத்தம் இந்த வீட்டின் பிள்ளை செல்வங்களின் எண்ணிக்கை பத்து.  பெருமாளின் மகள் இந்திராவை தவிர அங்குள்ள அத்தனை பெண் வாரிசுகளும்  அவர்களின் த

கொடை

  ஊரே களைகட்டியிருந்தது. பத்து வருடத்திற்கு ஒரு முறை வரும் மாடன் கோவில் “கொடை”  க்கு  வழக்கமான  மக்கள்  தொகையிலிருந்து  ஊரின் மக்கள் தொகை இரண்டு  மடங்கு அதிகரித்திருக்கும். “கொடை” நடப்பது மூன்று நாள் என்றாலும், அதற்கான குதூகலிப்பு ஊர் மக்களின் மனதில் ஐந்தாறு மாதங்களுக்கு முன்பே பூக்க தொடங்கிவிடும். “மக்கா இந்த வருஷம் கொடைக்கு தவறாம வந்திரனும் “ என்ற அழைப்பு ஊரின் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் வெளியூரில் இருக்கும் அவர்களின் சொந்தங்களுக்கு பறக்கும். ஊரை விட்டு இரண்டு மூன்று தலைமுறைக்கு முன் காலி செய்துவிட்டு போன குடும்பங்களின் வாரிசில் வந்த “பேரனும்” “கொள்ளு பேரனும்” கூட குடும்பத்தோடு மாடன் கோவில் கொடைக்கு வந்துவிடுவார்கள். “நீ அவனுக்கு மவனா……சின்ன பிள்ளையில பாத்தது…….உங்க அப்பனுக்கு சாயல் அப்படியே இருக்கு…….” என்று ஊரின் பெருசுகள், எதிரே பார்பவர்களையெல்லாம் ஏதேதோ விவரம் கேட்டும் சொல்லியும் குசலம் விசாரித்து கொள்ளும். பெரும்பாலும் எல்லோர் வீட்டு முற்றத்திலும், கடைசியாக நடந்து முடிந்திருந்த கொடைக்கும் இந்த கொடைக்கும் இடையேயான பத்து வருட இடைவெளியில், எதோ ஒரு தருணத்தில் மாடனுக்கு வெட்டுவதாக நேர்

புகை

இப்போ இப்படி இங்க வந்து எதுக்கும் உதவாம எல்லாருக்கும் சுமையா படுத்திருக்கேனே. இதுக்கு தான் இத்தனை மெனகிட்டேனா. என் குடும்பத்துக்காக ஓடுறேன்  ஓடுறேன்னு இப்ப என் குடும்பத்தை வீட்டுக்கும் ஆஸ்பத்திரிக்கும் ஓட வச்சுட்டேன். என்  பையன் இப்பலாம் பள்ளிக்கூடம் முடிஞ்சு நேரா இங்க தான் வரான். அவன் வந்த அப்புறம் அவன எனக்கு துணைக்கு வச்சிட்டு வீட்டுக்கு போய் சாப்பாடு எடுத்திட்டு வருகிறாள் அவள். சில நாள் காலையில் எழுந்திச்சு வீட்டுக்கு போய் குளிச்சிட்டு பள்ளிக்கூடம் போகிறான்.சில சமயம் இங்கேயே கை கால் கழுவி விட்டு  யூனிபார்ம் மாற்றிக் கொண்டு  இங்க இருந்தே பள்ளிக்கூடம் கிளம்பி விடுகிறான். இங்க நான் படுத்திட்டு இருக்கிற வாட்ர்லியே குளிக்க பாத்ரும் இருக்கு. ஆனா இடுக்கிட்டு இருக்கிற இடத்தில் குளிக்கிறதுக்கு அவனுக்கு பிடிக்கிறதில்ல. என் அம்மா அப்பாவும் அவள் அம்மா அப்பாவும் எங்கள விட்டு போய் வருஷங்கள் ஆகுது. நாலு பேரும் சொல்லி வச்ச மாதிரி அடுத்தடுத்து ஒன்னு ரெண்டு வருஷ இடைவெளியில் போய் சேர்ந்திட்டாங்க. இப்ப இந்த நிலைமையில் எங்களுக்கு ஒத்தாசை பண்ணுகிற அளவிற்கு சொந்தமெல்லாம் யாரும் எங்களுக்கில்லை. மிஞ்சி இருக

கூடை

 சாகினி வழக்கம் போல அன்னிக்கு கோவிலுக்கு போயிருந்தா. அவளுக்கு கோவிலுக்கு போறதுனா ரொம்ப இஷ்டம். வாரத்தில் திங்கள், செவ்வாய்,சனி இப்படி மூன்று நாள் போயிடுவா.இது தவிர பிரதோஷம்,சங்கடகரசதுர்த்தி இப்படி எதாச்சு ஒன்னு வேற கிழமைகள் வந்தா இந்த மூன்று நாள் கணக்கோட அதுவும் சேர்ந்து கொள்ளும். அவள் தோழிகள் இதுக்காக பல நாள் அவளை கிண்டல் செஞ்சதும் உண்டு. இந்த வயசுல ஜாலியா லைஃப் என்ஜாய் பண்றத விட்டுட்டு எப்போதும் கோவில் கோவில்னு சுத்துரியேனு.அதுக்கு இது வரை அவங்களோட அவள் விவாதம் பண்ணிகிட்டதே கிடையாது. ஒரு புன்னைகை மட்டும் தான் அவங்களோட அந்த கேள்விகளுக்கு அவள் கிட்ட இருந்து வருகிற பதில். மற்றவர்கள் எண்ணத்தையும் செயலையும் விவாதம் பண்ணுகிற பழக்கம் அவளுக்கு எப்பவும் இருந்ததில்லை. அதே மாதிரி தன்னோட பழக்கங்களை விவாதம் பண்ணுகிற வேர்களின் பேச்சை பெருசா கண்டு கொள்வதுமில்லை. இத்தனை பக்தியோட கோவிலுக்கு போறவள், அவளோட அம்மா நேரம் சரியில்லை சாமிக்கு இந்த பரிகாரம் பண்ணு அந்த பரிகாரம் பண்ணுன்னு சொன்னா மட்டும் பண்ண மாட்டாள். என்னால் அதுலாம் பண்ண முடியாதுனு மூஞ்சில அடிச்ச மாதிரி மறுத்து பேசிவிடுவாள்.அவங்க சொன்னாங்க இவங

கற்பு

 கையில் டீ டம்ளரோடு அமர நாற்காலி தேடி கடந்த 5  நிமிடங்களாக ஆணும் பெண்ணும் குழு குழுவாக அமர்ந்திருக்கும் அந்த சிற்றுண்டியகத்தின் நால பக்கமும் தன் கண்களால் துளாவி தனக்கும் தன் தோழிக்கும் அமர இருக்கை தேடி கொண்டிருந்தது குமுதினியின் விழிகள். தினமும் சாயந்திரம் மூன்று மணி முதல் நான்கு மணி வரை இப்படி தான் அந்த சிற்றுண்டியகத்தில் கூட்டம் நிரம்பி வழியும். அதனாலேயே குமுதினியும் ஷாகனாவும் பெரும்பாலும் நான்கு மணிக்கு மேல் தான் காப்பி சாப்பிட செல்வார்கள். ஆனால் இன்று ஷாகனாவிற்கு தாங்க முடியாத தலைவலி காரணத்தால் சூடாக காப்பி குடித்தால் கொஞ்சம் இதப்படும் என்று கருதி  குமுதினியையும் உடன் அழைத்துவிட்டு இந்த கூட்ட நெரிசலான நேரத்தில் காபி அருந்த வந்து விட்டாள்.  சிற்றுடியகத்தின் டீ கடையில் இருந்த நெரிசலுக்கு குமுதினிக்கு மட்டுந்தான் டீ கைக்கு வந்திருக்கிறது. தலைவலிக்காக காபி குடிக்க வந்த ஷாகனா ஆணும் பெண்ணும் நெரிந்து கொண்டிருக்கும் அந்த நெரிசலில் ‘அண்ணா இங்க இன்னொரு காபி' என்று நெரிசலின் ஒரு பக்கம் நின்று கத்தி கொண்டிருந்தாள்.  அவள் வருவதற்குள் இருக்கை பிடிக்கும் இலக்கோடு ஐந்து நிமிடங்களாக போராடி கொண

போதை

 போதை பொருள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகமாகிட்டே போகுதாம். இந்த பத்திரிக்கையில் ஒரு கணக்கெடுப்பு போட்டிருக்கு. இந்த பகவான் ‌இதெல்லாம் பார்த்திட்டு கம்முனு தானே இருக்காரு. அநியாயம் முத்தி போச்சுன்னா அவதாரம் எடுப்பேனு சொன்னவர் இவ்ளோ அநியாயம் முத்தின அப்புறமும் என்ன பண்றாரு தெரியல.தன் மனைவியின் இந்த பிதற்றல்களை அமைதியான ஒரு அசட்டு சிரிப்போடு செவி மடுத்து கொண்டிருந்தார் ரங்கநாதன்.அந்த சிரிப்போடு சிறு வேதனையும் ஓரமாய் ஒட்டிக்கொண்டிருந்தது. 'ஏன் அப்படி சிரிக்ரீங்க??’ 'ஒன்னுமில்ல' 'சரி விடுங்க. இந்த 40 வருஷமா உங்களோட குடித்தனம் நடத்துறேன். நீங்க மறைச்சிட்டா நீங்க என்ன நினைக்கிறீங்கனு தெரியாதாக்கும்' அதற்கும் ரங்கநாதனின் அசட்டு சிரிப்பு தொடரவே ஏதோ முனுமுனுத்த படியே முற்றத்தில் இருந்து நகர்ந்தாள் மங்கலம். அவர் முற்றத்தின் கூடத்தில் இருந்த அந்த ஈசிசேரில் கண்மூடி அந்நாந்து சாய்ந்து கொண்டார். காதல் முற்றி போய் தவறான ஒருத்தனுடன் ஓட்டம் பிடித்து இன்று ஒற்றை மகனோடு தன் பக்கத்து தெருவிலேயே சீரழிந்து கொண்டிருக்கும் தன் மகளின் முகம் ரங்கநாதனின் மூடிய விழிகளுக்குள் நிமிடத்திற்கு