புகை

இப்போ இப்படி இங்க வந்து எதுக்கும் உதவாம எல்லாருக்கும் சுமையா படுத்திருக்கேனே. இதுக்கு தான் இத்தனை மெனகிட்டேனா. என் குடும்பத்துக்காக ஓடுறேன்  ஓடுறேன்னு இப்ப என் குடும்பத்தை வீட்டுக்கும் ஆஸ்பத்திரிக்கும் ஓட வச்சுட்டேன். என்  பையன் இப்பலாம் பள்ளிக்கூடம் முடிஞ்சு நேரா இங்க தான் வரான். அவன் வந்த அப்புறம் அவன எனக்கு துணைக்கு வச்சிட்டு வீட்டுக்கு போய் சாப்பாடு எடுத்திட்டு வருகிறாள் அவள்.

சில நாள் காலையில் எழுந்திச்சு வீட்டுக்கு போய் குளிச்சிட்டு பள்ளிக்கூடம் போகிறான்.சில சமயம் இங்கேயே கை கால் கழுவி விட்டு  யூனிபார்ம் மாற்றிக் கொண்டு  இங்க இருந்தே பள்ளிக்கூடம் கிளம்பி விடுகிறான். இங்க நான் படுத்திட்டு இருக்கிற வாட்ர்லியே குளிக்க பாத்ரும் இருக்கு. ஆனா இடுக்கிட்டு இருக்கிற இடத்தில் குளிக்கிறதுக்கு அவனுக்கு பிடிக்கிறதில்ல.


என் அம்மா அப்பாவும் அவள் அம்மா அப்பாவும் எங்கள விட்டு போய் வருஷங்கள் ஆகுது. நாலு பேரும் சொல்லி வச்ச மாதிரி அடுத்தடுத்து ஒன்னு ரெண்டு வருஷ இடைவெளியில் போய் சேர்ந்திட்டாங்க. இப்ப இந்த நிலைமையில் எங்களுக்கு ஒத்தாசை பண்ணுகிற அளவிற்கு சொந்தமெல்லாம் யாரும் எங்களுக்கில்லை.

மிஞ்சி இருக்கிற சொந்தமெல்லாம் நாங்க இந்த நிலைமையில் கஷ்ட படுகிறத பார்த்து ஐயோ பாவம்னு உதட்டார சொல்லிட்டு, நம்ம நல்ல இருக்கோம் அவன் கஷ்ட பட்றான்னு மனசார சின்னதா ஆனந்த படுகிற சொந்தம் தான். ஆமா அப்படி தான் இப்ப முக்கால்வாசி பேர் இருக்காங்க. அவனுக்கு ஆயிரம் கஷ்டம் இருக்கும்.ஆனால் அடுத்தவன் கஷ்டபட்டா அதுல ஒரு சின்ன ஆனந்தம். கலி முத்திட்டே போகுது.வேற ஒன்னும் சொல்றதக்கில்ல. இப்ப எதுக்கு எனக்கு அந்த அற்ப மனுசங்க கதை, நான் என் கதைக்கு வரேன்.


அப்ப ஊதி ஊதி தள்ளும் பொழுதெல்லாம் சொகுசா இருந்திச்சு. இப்ப அவஸ்தை படுறேன். சில நேரத்தில் அது என்னவோ பெரிய சாதனை மாதிரி ஸ்டைலா வேற ஊதிருக்கேன். என்ன கடந்து மூக்கு மூடிட்டு போறவங்கள நக்கலா பார்த்த நாளும் உண்டு. இப்போ இங்க வந்து அவங்க என் நிலைமைய பார்த்தா அவங்க தான் என்ன நக்கலா பார்க்கணும்.மத்தவங்க முகத்தில் ஊதி  தள்ளுறப்ப தெரியல, என்ன உலகத்தில் இருந்து ஊதி தள்ள இதுவே எமனா வரும்னு.


இளம் பருவம் வரைக்கும் எனக்கு அந்த பாழா போன பழக்கம் இல்லை. வேலைக்கு போன அப்புறம் இதுலாம் ஒரு எண்ஜாய்மண்ட்னு சொல்லி ஒரு சண்டாளி பய ஏற்படுத்திவிட்டது தான் அந்த பழக்கம். என்ன இது கருமமா வாடை வருதுனு ஆரம்பத்தில் மூக்கு மூடினப்ப, ஃபர்ஸ்ட் டைம் அப்படி இருக்கும் அப்புறம் சொர்க்கமா இருக்கும்னு சொன்னான் அவன்.

 இதெல்லாம் உடம்புக்கு கெடுதி இல்லையானு கேட்டப்ப, நான் பதினைந்து வருஷமா ஊதிட்டு இருக்கேன் நல்லா தான இருக்கேன் சொல்லி,  அவன் கட்டு மஸ்து மேனியை காட்டி என் வாயை அடச்சிட்டான். அப்ப அவன் சொன்னதுலாம் கேட்டு நானும் அந்த ஊதுற பழக்கத்தில் விழுந்திட்டேன். அவன் சொன்னது சரிதான் அவன் விஷயத்தில்.அவன் இன்னும் நல்லாதான் இருக்கான். நான் தான் இப்படி வந்து முடங்கி கிடக்கிறேன். என் நேரம் சரியில்லை போலும்‌ .நான் இப்படி சொல்றத இப்ப என் பொண்டாட்டி கேட்டால், ஒழுங்கா இந்த பழக்கத்தை பழகாம ஒழுக்கமா இருக்க முடியல, இப்போ நேரத்து மேல் பழி போடுறீங்களானு என்னை திட்டுவாள். அதுவும் சரிதானே.ஓந்தான பிடிச்சு வேலியில் விட்டுட்டு இப்போ குத்துதே கொடையுதேனா அது கொழுப்பு இல்லாமா வேற என்ன. அடுத்தவன் சொல்றத கேக்க முன்னாடி சுய புத்தியை உபயோகபடுத்தனும்னு புரியல அப்போ.

இப்ப இங்க வந்து ஆறு மாசமாச்சு. அந்த பாழ போன புகை பழகத்தில் விழுந்ததிற்காக நானே என்ன தினம் தினம் நொந்துக்றேன். ஆனால் இந்த புலம்பலோட பலன் என்னனு கேட்டா,ஒன்னுமேயில்ல தான். இருந்தாலும் இந்த புலம்பல் நால மன ஆதி அடங்குதே கொஞ்சமா.அந்த ஆசுவாசத்திற்காக புலம்பிக்றேன்.


மணி மூணு அரை ஆச்சு இன்னும் அரை மணி நேரத்தில் என் மகன் பள்ளிக்கூடம் முடிச்சிட்டு வந்திருவான். அப்புறம் வழக்கம் போல் அவள் வீட்டுக்கு நடையை கெட்டுவாள்‌ . நான் செய்த தப்புக்கு இப்ப மூனு பேரும் சீரழிய மாதிரி ஆயிடுச்சு. என்ன மனசுல சுமந்ததிற்கு இப்படி ஒரு கூலியை குடுத்திட்டேன் அவங்களுக்கு.


 கண் அப்படியே இருட்ற மாதிரி இருக்கு.தூக்கம் வருதோ, அதுக்கு ஏன் கண்ணு இருட்டுது.அட‌ நான் எப்படி எந்திருச்சேன் அதுக்குள்ள. அது யாரு என்னை மாதிரியே கட்டில்ல படுத்திட்டு இருக்காரு.


என் மகன்  எதுக்கு அவர் தலைமாட்டில் பேந்த பேந்த முழிசிட்டு நிக்கிறான். இவள் எங்க வேகமாக ஓடுகிறாள். 

‘கமலா எங்கடி ஓடுற?’

அட நான் கூபிடுறது கூட காதுல வாங்காம இப்படி ஓடுறா.போனவ போன வேகத்தில் டாக்டரோட வந்திருக்கிறா. டாக்டர் ஏன் அந்த கட்டிலில் படுத்திருக்கும் என்னை போலவே இருக்கும் ஆசாமிய செக் பண்றாரு.


‘சாரி மேடம். கி ஸ் டெட்'


ஓனு அழுகிறாள் என் பொண்டாட்டி.என் மகனும் அப்பான்னு கத்துறான்.


‘ஓ நான் தான் இறந்திட்டேனா. அப்ப கட்டில் மேல் கிடக்கிறது என் டெட் பாடியா. இந்த புகை பழக்கத்தில் புதஞ்சு இன்னிக்கு என் குடும்பத்தை அனாதையாக விட்டுட்டு மண்ணுக்கு இடையில் புதைய போறேனே.கடவுளே..’

‘என் முகத்த இழுத்து மூடுறாங்களே. என் பொண்டாட்டியும் பிள்ளையும் தனியா இனிமே கஷ்டபடுமே. எல்லாம் கை மீறி போச்சே.’ 





Comments

Popular posts from this blog

சிக்கல் கோலம்

கொடை

போதை